/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் கணினி வழங்கல்

ADDED : ஜூலை 22, 2024 12:11 PM
கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை கல்லுாரிக்கு வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செட்டிப்பள்ளியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஐ.ஆர்.டி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கடந்த, 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு கடந்த 1996- -1999ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், 25 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் முதல்வர் பழனிசெட்டி, தற்போதைய முதல்வர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லுாரிக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகள் வழங்கப்பட்டன.
மேலும், முன்னாள் மாணவர்கள் கல்லுாரி வளாகத்திலுாள்ள அவர்கள் பயின்ற வகுப்பறை உள்ளே சென்று நின்று, போட்டோ மற்றும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில், முன்னாள் மாணவர்கள் நினைவாக மரக்கன்று நடப் பட்டன.