/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழைநீர் வடிகாலில் குப்பை அகற்றும் பணி ஆய்வு
/
மழைநீர் வடிகாலில் குப்பை அகற்றும் பணி ஆய்வு
ADDED : அக் 16, 2024 01:01 AM
கிருஷ்ணகிரி, அக். 16-
காவேரிப்பட்டணம்
எம்.ஜி.ஆர்., நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இங்கு மழைநீர் வடிகால் இல்லை.
அருகிலுள்ள மழைநீர், சாக்கடை கால்வாய்
களிலும் குப்பை அள்ளப்படுவதில்லை. டவுன் பஞ்., மற்றும் மிட்டஹள்ளி பஞ்., நடுவே இருக்கும் இந்த அவலநிலையை எந்த நிர்வாகமும் கண்டு கொள்வதும் இல்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொக்லைன் மூலம் அடைப்புகள் சரிசெய்யப்பட்ட நிலையிலும், இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் துார்வார மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு அப்பகுதியில் ஆய்வு செய்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்
பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து, தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்ற வேண்டும். இது குறித்து புகாரளித்தால், அதிகாரிகள், ஆளும்கட்சியினர் பெயரளவுக்கு மட்டும் வந்து பேசி செல்கின்றனரே தவிர, நடவடிக்கை எடுப்பதில்லை'
என்றனர்.