/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் - தளி சாலை விரிவாக்க பணி ஆய்வு
/
ஓசூர் - தளி சாலை விரிவாக்க பணி ஆய்வு
ADDED : அக் 23, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 66 கோடி ரூபாய் மதிப்பில், ஓசூர் - தளி சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர் ஆய்வு செய்தார்.
அப்போது, சாலையின் தரக்கட்டுப்பாடு, அகலம், தடிமன் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் நவீன், சாலை ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.