/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு
/
ஓசூரில் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
ஓசூர் : ஓசூர் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், 105 தனியார் பள்ளிகள் சார்பில், மாணவ, மாணவிகளை அழைத்து செல்ல, 832 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை சாலையில் ஓட்ட தகுதியாக உள்ளதா என, ஆண்டுக்கு ஒருமுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வு செய்யப்படும். இந்த ஆண்டுக்கான ஆய்வு, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
முதற்கட்டமாக, 96 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சப்- கலெக்டர் பிரியங்கா, டி.எஸ்.பி., பாபுபிரசாந்த், வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ரமாதேவி ஆகியோர், பள்ளி வாகனங்களில் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, அவசர கால வழி, முதலுதவி பெட்டி, தீத்தடுப்பு கருவிகள், வேகக்கட்டுப்பாட்டு மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் என, 22 வகையான பொருட்கள் சரியான முறையில் உள்ளதா உள்ளதா என பார்வையிட்டனர்.அப்போது குறைபாடுகள் உள்ள, 9 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. பஸ் டிரைவர்கள், உதவியாளர்களுக்கு, வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும். விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

