ADDED : பிப் 07, 2025 04:10 AM
கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரையிடம் நேற்று மாலை புகார் மனு அளித்தார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், சுகா-தார அலுவலராக பணியாற்று
பவர் ராமகிருஷ்ணன். நகராட்சி பகுதியில், தினமும் குப்பை அள்-ளுவதில் பல்வேறு முறைகேடுகள் செய்கிறார். சரிவர குப்பையும் அள்ளுவதில்லை. டெங்கு தடுப்பு பெண் பணியாளர்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து புகார-ளிக்க கடந்த, 25 ல் நகராட்சி கமிஷனர் அறைக்கு சென்றேன். அப்போது, இது குறித்து சுகாதார அலுவலரிடம் கேட்டேன். நீங்கள் என்ன அ.தி.மு.க.,காரரா எனவும் கேட்டேன். இதற்கு அவர், கோபப்பட்டு என்னை ஒருமையில் திட்டி சென்றார். நக-ராட்சி நிர்வாகத்தில், கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா எப்படி வந்தது. அதில், நான் அவரை பார்த்து எதிர்கட்சிகாரனா என கேட்ட வீடியோவை மட்டும், சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். என் பெயரை கெடுக்கும் வகையில், வீடியோ வெளியிட்டதிலும், ரகசிய கேமரா வைத்ததிலும், நகராட்சி சுகா-தார அலுவலர் ராமகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் உலக-நாதன், இளநிலை உதவியாளர் பிரபு உள்ளிட்டோர் மீது, எனக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும். இதில், தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

