ADDED : அக் 21, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி
அடுத்த கே.புதுாரை சேர்ந்தவர் மாதவன், 47, ஸ்வீட் மாஸ்டர். இவருக்கு
குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த, 16ல், போதையில் வீட்டில்
படுத்திருந்தவர், கட்டிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதில், அவரது
பின்பக்க மண்டையில் அடிபட்டது. அவரை உறவினர்கள் மீட்டு,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய
நிலையில் உயிரிழந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
