/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2024 01:40 AM
கிருஷ்ணகிரி, டிச. 18-
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய ஒன்றியங்களிலுள்ள ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நிவாரணமாக, 5,000 ரூபாயும், மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களிலுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணமாக, 2,000 ரூபாயும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டுமே குறைவான நாட்கள் வேலை வழங்கியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. என??, ?????????? ???? ??????? ????? ????????. ????? ??????????? ??வே, கூடுதலாக வேலை நாட்கள் வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து, கருணாநிதி கொண்டு வந்த நலவாரியத்தை அமல்படுத்த வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகைகள் அனைத்தும், 2023 ஜூன் மாதத்திற்கு பிறகு நிதி வழங்காமல் நிறுத்தியதை, உடனே வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து, குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், துணை செயலாளர்கள் சின்னசாமி, ராமமூர்த்தி, துணைத்
தலைவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய அணி மாவட தலைவர் சிவராஜ், பொருளாளர் சக்கரவர்த்தி உள்பட பலர்
பங்கேற்றனர்.