/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் 45 நாட்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்
/
கிருஷ்ணகிரியில் 45 நாட்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்
கிருஷ்ணகிரியில் 45 நாட்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்
கிருஷ்ணகிரியில் 45 நாட்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம்
ADDED : ஜூலை 02, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், தி.மு.க., சார்பில் நடந்த, 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் கிழக்கு மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்தனர்.
இதில், தமிழக உணவுத்துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பேசியதாவது:
முதல்வர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை தொடங்கி வைத்துள்ளார். இன்று முதல், 45 நாட்கள் கிராமம், நகரம், பூத் என அனைத்து பகுதிகளிலும் 'ஓரணியில் தமிழ்நாடு' முழக்கத்தை தி.மு.க., ஒலிக்க செய்ய உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார நிகழ்ச்சி மூலம், 50 சதவீதம் வாக்காளர்களை இணைக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நாம், ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை எடுத்து கூற வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைகளை கூட அங்கீகரிக்க மனமில்லாமல், தமிழகத்தின் மீது வன்மம் கொண்டுள்ளது, பா.ஜ., அரசு. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பமும், 'ஓரணியில் தமிழ்நாடு' என்று ஒன்றிணைப்பதே இதன் இலக்கு. நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக., 15ல், இப்பணியை முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.