/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2025 02:24 AM
கிருஷ்ணகிரி, 'மா'விற்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்கக்கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிவராஜி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணு, செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமைய்யா, இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 'மா' விலை வீழ்ச்சியால், கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாங்காய் டன்னுக்கு, 25,000 ரூபாய், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு, மாங்காய் சந்தை அமைத்து பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகாவுக்கு ஒரு மாங்கூழ் தொழிற்சாலையை அரசு அமைக்க வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 400 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.
சங்க ஒன்றிய தலைவர் சிவநாதன் நன்றி கூறினார்.