/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்காத்திருப்பு போராட்டம்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 18, 2024 01:38 AM
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்காத்திருப்பு போராட்டம்
ஓசூர், டிச. 18-
சூளகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் முரளி தலைமை வகித்தார். சூளகிரி தாசில்தார் மோகன்தாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஓபேபாளையம் கிராம பழங்குடியின மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பண்டப்பள்ளி பகுதியில் போடப்பட்ட தார்ச்சாலை மோசமாக இருப்பதால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நேற்று முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராஜூ, மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு மலைவாழ் சங்க மாவட்ட செயலாளர் குமாரவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.