/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
/
மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 22, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி, மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் சார்பில், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அமுல்ராஜ், மாவட்ட தலைவர் வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுசாமி, வன்னிர் சங்க மாநில துணைத் தலைவர் பாடி.செல்வம், பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம், கிழக்கு மாவட்ட செயலாளர் மேகநாதன் உள்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, மா விலையை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்தாண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும். தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனையை தடுக்க வேண்டும். மா கொள்முதல் செய்வதில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வனப்பகுதிகளை ஒட்டிய விவசாய நிலங்களில், யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டும். யானை தாக்கி உயிரிழக்கும் விவசாய குடும்பத்திற்கு குறைந்த பட்சம், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.