/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 02, 2025 02:26 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை எதிர்த்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெகதாம்பிகா, கோவிந்தராஜ், இணை செயலாளர் சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். கூட்டுறவுத்துறை சங்க மாவட்ட தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை எதிர்த்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
* தொழிலாளர் உரிமையை பறிக்கும், 4 சட்ட தொகுப்புகளை எதிர்த்து ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டக்கிளை தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், சமூக நலத்துறை மாநில செயலாளர் காந்திமதி, நெடுஞ்சாலைத்துறை மாநில இணைச்செயலாளர் காத்தவராயன், ஊரக வளர்ச்சித் துறை பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் பேசினார். வட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

