/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாதகமான முடிவை அறிவிக்காத தமிழக அரசு குவாரி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்
/
சாதகமான முடிவை அறிவிக்காத தமிழக அரசு குவாரி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்
சாதகமான முடிவை அறிவிக்காத தமிழக அரசு குவாரி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்
சாதகமான முடிவை அறிவிக்காத தமிழக அரசு குவாரி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம்
ADDED : ஏப் 22, 2025 01:55 AM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கிரஷர், குவாரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்த நிலையில், அரசு எந்த முடிவும் அறிவிக்காததால் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு, குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர, கொடுக்கும் நடைச்சீட்டை இதுவரை ஒரு கன மீட்டர், 1.75 டன் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 2.75 டன் என அறிவித்துள்ளது. மேலும், குவாரி இருக்கும் நிலங்களுக்கான வரி என, ஒரு டன்னுக்கு,
90 ரூபாய் செலுத்த அரசு உத்தரவிட்டது.
இதை திரும்ப பெற வலியுறுத்தி, ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் சார்பில் கடந்த, 5ம் தேதி முதல், 60 சதவீத குவாரிகள், கிரஷர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கமும் போராட்டம் அறிவித்ததால் கடந்த, 16 முதல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த செயலர்களுடன், கிரஷர், குவாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
ஏற்கனவே வழங்கப்பட்ட, 24 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகளை ஏற்பதாக, அமைச்சர் அறிவித்தார். தற்போது பிரச்னையாக உள்ள, 2 உத்தரவை திரும்ப பெற கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் பேசிவிட்டு கூறுவதாக, அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
தங்களுக்கு சாதகமாக, அரசிடமிருந்து பதில் வரும் என நினைத்து, தொழிலாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அரசிடமிருந்து எந்த பதிலும் வராததால், நேற்று மீண்டும் கோனேரிப்பள்ளியில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வாபஸ்
அமைச்சர் துரைமுருகனுடன் நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையில், 22 கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்ததால், கிரஷர், குவாரி உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஓசூர் கிரஷர் ஓனர்ஸ் பெடரேஷன் தலைவர் சம்பங்கி கூறியதாவது: அரசிடம் வைத்த, 26 கோரிக்கைகளில், முக்கியமான இரு கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. அதனால், ஒரு யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் வரை ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இன்று முதல் கிரஷர், குவாரிகள் இயங்கும். விலை உயர்த்தப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்ட குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.