/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ் புத்தாண்டு சித்திரை மாத பிறப்பு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

ADDED : ஏப் 15, 2024 04:01 AM
கிருஷ்ணகிரி: தமிழ் புத்தாண்டு சித்திரை மாத பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் நேற்று காலை, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. விநாயகருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். இதே போல, கிருஷ்ணகிரி காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கக்கவச அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.
மேலும், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோவில், கிருஷ்ணன் கோவில், ஐயப்பன் கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில், சென்னை சாலை பெரிய மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலை சமயபுர மாரியம்மன் கோவில், போலீஸ் குடியிருப்பு துர்க்கையம்மன் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் உட்பட மாவட்டம் முழுவதுமுள்ள கோவில்களில் நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.