/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா மாணவியர் விழிப்புணர்வு பேரணி
/
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா மாணவியர் விழிப்புணர்வு பேரணி
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா மாணவியர் விழிப்புணர்வு பேரணி
தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா மாணவியர் விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 25, 2025 08:03 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ் ஆட்சி-மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து, துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டு-தோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்-பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்-டத்தில் கடந்த, 17 முதல், வரும் டிச., 27 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது,'' என்றார்.
ஆட்சிமொழி சட்ட வாரவிழா கொண்டாட்ட, 6-வது நாளான நேற்று, விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி புதிய ஸ்டாண்டில் துவங்-கிய பேரணி, பழையப்பேட்டை காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரி மாணவியர், 150 பேர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், தவில், மிருதங்கம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் கனிமொழி, அலுவலக பணியாளர்கள், கல்லுாரி பேராசிரி-யர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

