/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
7 ஆண்டுகளாக தார்ச்சாலை சேதம்; சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
7 ஆண்டுகளாக தார்ச்சாலை சேதம்; சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
7 ஆண்டுகளாக தார்ச்சாலை சேதம்; சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
7 ஆண்டுகளாக தார்ச்சாலை சேதம்; சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : மார் 11, 2025 06:38 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் கிராமம் வழியாக, ஐகுந்தம்கொத்தப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக நாயக்கனுார், கொல்ரூர் உட்பட, 10க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை தினமும் கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோல், பள்ளி, கல்லுாரிகளுக்கு கிருஷ்ணகிரி, பர்கூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சூரில் இருந்து ஐகுந்தம்கொத்தப்பள்ளிக்கு செல்லும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. நாளடைவில், இச்சாலை போதிய பராமரிப்பின்றி பல்வேறு இடங்களில் ஜல்லி பெயர்ந்து, குண்டும், குழியுமாக மாறியது. இதனால், தினமும் இச்சாலையில் பயணம் செய்வோர், மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,''அஞ்சூரில் இருந்து ஐகுந்தம்கொத்தபள்ளிக்கு செல்லும் சாலை வழியாக தினமும், 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். விசேஷ நாட்களில் ஐகுந்தம்கொத்தப்பள்ளி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பக்தர்கள் அதிகளவில் இச்சாலையில் செல்கின்றனர். சாலை போதிய பராமரிப்பின்றி, மண் சாலையாக மாறியுள்ளது. எனவே கடந்த, 7 ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ள இச்சாலையை உடனே, புதுப்பிக்க வேண்டும்'' என்றனர்.