/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.87.95 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பு
/
ரூ.87.95 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பு
ADDED : அக் 29, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லம்பள்ளி பஞ்., மிட்டப்பள்ளி கிராமத்திலிருந்து, பாலிகானுார் வரை, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், 2025-26ம் ஆண்டு நிதி, 87.95 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 கி.மீ., தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
அப்போது அப்பகுதி மக்கள், இங்கிருந்து விவசாய விளைப்பொருட்களை ராயக்கோட்டை மார்க்கெட் கொண்டு செல்ல பஸ் வசதி செய்துதர வேண்டும். பாலிகானுாரில் இருந்து கீழ்நுாக்கி வரை உள்ள மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என, எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர். விரைவில், 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தருவதாக, எம்.எல்.ஏ., வாக்குறுதி அளித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன், ஒன்றிய செயலாளர் சூர்யா, மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தி மாது, முன்னாள் பஞ்., தலைவர் லட்சுமி கோவிந்தராஜ், விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

