/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 டாஸ்மாக் மேலாளர் அறிக்கை
/
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 டாஸ்மாக் மேலாளர் அறிக்கை
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 டாஸ்மாக் மேலாளர் அறிக்கை
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 டாஸ்மாக் மேலாளர் அறிக்கை
ADDED : டிச 28, 2025 07:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை முதல் (29-ம் தேதி) காலி மதுபாட்டிலுக்கு, 10 ரூபாய் திரும்ப பெறும் திட்டம் துவங்கப்படுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செங்கிஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீ-திமன்ற உத்தரவின்படி, சுற்றுச்சுழல் மாசுப்படு -தலை தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வாணிபக் கழகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளை (29ம் தேதி) முதல் வாடிக்கையாளர்கள் பாட்டில் ஒன்றுக்கு, 10 ரூபாய் கூடுதலாக செலுத்தி மது பானங்களை பெற்று கொள்ள வேண்டும்.
பயன்படுத்தியபின், காலி பாட்டிலினை, அதே கடையில் திருப்பிக் கொடுத்து, 10 ரூபாயை திரும்ப பெற்று கொள்-ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.