/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது
/
குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது
ADDED : டிச 28, 2025 07:35 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் கதிரவன், 36. தனியார் நிறுவன ஊழியர்; இவர் கடந்த, 25ம் தேதி மாலை, 6:30 மணிக்கு தனது இரண்டரை வயது ஆண் குழந்தை-யுடன், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, பஞ்சமுக விநாயகர் கோவிலுக்கு சென்றார்.
கோவிலுக்கு வெளியே நின்றிருந்த குழந்-தையை, அங்கு வந்த பெண் ஒருவர், கையில் எடுத்து கொஞ்சியவாறு, கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் நகையை திருடினார். இதைய-றிந்த கதிரவன், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி தீபா, 28, என்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.

