ADDED : ஜூலை 30, 2026 02:15 AM
அ நிறம் | அளவு
ராயக்கோட்டை: ராயக்கோட்டை அடுத்த வஜ்ரபள்ளம் பகுதி யில், டாஸ்மாக் கடை இயங்குகிறது. இங்கு கடந்த, 8 மாதங்களுக்கு முன், ஷட்-டரை உடைத்து மர்ம நபர் மதுபானத்தை திருட முயன்றார். 2வது முறையாக கடந்த, 27ம் தேதி அதிகாலை, டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை துளையிட்டு, பீர் மற்றும் மதுபானங்கள் சில-வற்றை மர்ம நபர் திருடி சென்றார்.
மாவட்ட எஸ்.பி., அனிதா உத்தரவு படி, ராயக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார், மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில், ராயக்கோட்டை அருகே போடி-நாயக்கனஹள்ளியை சேர்ந்த திம்மராஜ், 32, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்-தனர்.
