/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பதுக்கிய வியாபாரி கைது
/
புகையிலை பதுக்கிய வியாபாரி கைது
ADDED : ஜூன் 24, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பகுதியில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய, டீ துாள் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம்
பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 42; டீ துாள் வியாபாரி. இவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து வருவதாக, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று பள்ளிப்பாளையம் போலீசார் இவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 70,000 ரூபாய் மதிப்புள்ள, 42 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.