தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காப்பக மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர், தொழிலாளிக்கு சிறை

காப்பக மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர், தொழிலாளிக்கு சிறை

காப்பக மாணவியிடம் சில்மிஷம் ஆசிரியர், தொழிலாளிக்கு சிறை


ADDED : மே 15, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி,:மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு, 3 ஆண்டு, தொழிலாளிக்கு, 10 ஆண்டும் சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒரு குழந்தைகள் காப்பகம் இயங்கி வந்தது. அங்குள்ள மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆனந்த், 39, என்பவர் டியூசன் எடுத்துள்ளார். கடந்த, 2019 டிச., 4ல் டியூசனில் படித்த, 16 வயது மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரின்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

விசாரணையில், ஆசிரியர் ஆனந்த்துக்கு முன்னரே, அதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சிவா, 34, என்பவர், சம்பந்தப்பட்ட மாணவியை மிரட்டி, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி லதா, குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த்துக்கு மூன்றாண்டு சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம், சிவாவுக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் இருவரும், மேலும், தலா 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us