/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவியரை வழியனுப்பிய ஆசிரியர்கள்

ADDED : அக் 29, 2025 01:09 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி வித்யாஸ்ரீ, மாவட்ட அளவில், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான, 200, 400 மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார். அதேபோல், 9ம் வகுப்பு மாணவி மனுஷா, நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். 9ம் வகுப்பு மாணவன் கவுதமன், குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தை தட்டி சென்றார். இந்நிலையில், மாநில அளவிலான மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள், தஞ்சாவூரில் இன்று (அக்.29) துவங்கி, 3 நாட்கள் நடக்கிறது.
அதில் பங்கேற்க, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவியர் வித்யாஸ்ரீ, மனுஷா ஆகியோர், ஓசூரிலிருந்து நேற்று ரயிலில் புறப்பட்டு சென்றனர். அவர்களை, ரயில்வே ஸ்டேஷனில் பள்ளி தலைமையாசிரியர் ராணிமங்கலம், பட்டதாரி ஆசிரியர் சரவணன், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் சத்தியபாமா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கு மாநில போட்டிக்கு, அடுத்த இரு நாட்களில் மாணவன் கவுதமன் செல்ல உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.