தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தொழில்நுட்ப பணி தேர்வில்: 578 பேர் 'ஆப்சென்ட்'

தொழில்நுட்ப பணி தேர்வில்: 578 பேர் 'ஆப்சென்ட்'

தொழில்நுட்ப பணி தேர்வில்: 578 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : நவ 16, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வை, 598 பேர் எழுதிய நிலையில், 578 பேர் தேர்வுக்கு, 'ஆப்சென்ட்' ஆகினர்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு மையத்தை, கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நான்கு மையங்களில் நடந்தது.

இத்தேர்வு எழுத மொத்தம், 1,176 பேர் விண்ணப்பித்ததில், 598 பேர் தேர்வு

எழுதினர். 578 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வு மையங்களை கண்காணிக்க, ஆர்.டி.ஓ., முதன்மை கண்காணிப்பாளராகவும், ஒவ்வொரு மையத்திற்கும் தலா ஒரு கண்காணிப்பாளர்கள் என, 4 அலுவலர்களும், ஒரு பறக்கும் படை, ஒரு மொபைல் படை மற்றும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்து வசதி மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது,'' என்றார்.

ஆய்வின் போது, ஆர்.டி.ஓ., (பொ) கிருஷ்ணன், தாசில்தார் ராஜலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us