ADDED : மார் 29, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், தளி அடுத்த பி.ஆர்., தொட்டி கிராமத்தை சேர்ந்தவர்
ரமேஷ்குமார், 41.
இவர் கடந்த பிப்., 24 ல் பணி முடித்து விட்டு, தன்
பொக்லைன் வாகனத்தை தேன்கனிக்கோட்டை அருகே காசி அக்ரஹாரம்
கிராமத்தில் நிறுத்தியிருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில்,
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா அருகே பிளர்தனஹள்ளி கிராமத்தை
சேர்ந்த முனிராஜ், 26, என்பவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, பொக்லைன்
வாகனத்தை திருடியது தெரிந்தது. முனிராஜை நேற்று கைது செய்த போலீசார்,
மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

