/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தெலுங்கு, தமிழ் இணைந்து தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்'
/
'தெலுங்கு, தமிழ் இணைந்து தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்'
'தெலுங்கு, தமிழ் இணைந்து தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்'
'தெலுங்கு, தமிழ் இணைந்து தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்'
ADDED : ஆக 13, 2025 05:55 AM
சூளகிரி: ''தெலுங்கு, தமிழ் இணைந்து, தி.மு.க.,வை வீழ்த்தி மிகப்பெ-ரிய வெற்றி பெற வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செய-லாளர் இ.பி.எஸ்., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகு-திக்கு உட்பட்ட சூளகிரியில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் பேசியதாவது:அ.தி.மு.க., அரசு ஆட்சி அமைந்தவுடன், நிறுத்தப்பட்ட திட்-டங்கள் அனைத்தும் தொடரும். ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்குவது தான், அ.தி.மு.க., லட்சியம். இருக்க இருப்பிடம், உண்ண உணவு, நல்ல மருத்துவம், குடிநீர், கல்வி என அனைத்தும், ஒட்டு மொத்த மக்களுக்கும் வழங்கப்படும். நாங்கள் டில்லி சென்றபோது, மத்திய உள்துறை அமைச்சரை சந்-தித்து, 100 நாள் வேலை திட்ட ஊதிய பாக்கியை விடுவிக்குமாறு கேட்டோம். அதையேற்று, 2,999 கோடியை மத்திய அரசு விடு-வித்தது. ஆட்சி செய்யும், தி.மு.க.,விற்கு திறமையில்லை. ஆழி-யாளம் அணைக்கட்டிலிருந்து, தர்மபுரி மாவட்டம், துாள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்