/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, நகை திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி, நகை திருட்டு
ADDED : ஜூன் 16, 2025 03:27 AM
தேன்கனிக்கோட்டை: கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே பர்தால் உன்னிசா லே அவுட்டில் வசிப்பவர் கிரீஷ், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்-கனிக்கோட்டை அருகே அன்னியாளத்தில் உள்ள ரேணுகா எல்-லம்மா தேவி கோவிலில் பூசாரியாக உள்ளார்.
கடந்த, 10ல் காலை கோவிலில் பூஜை முடித்து விட்டு, இரவில் கோவில் நடையை சாத்தி பூட்டி விட்டு, அன்னியாளத்திலுள்ள சிக்கண்ணா என்பவரது வீட்டில் சாவியை கொடுத்து விட்டு, ஊருக்கு சென்று விட்டார். நேற்று காலை, 11:45 மணிக்கு, கிரீஷை தொடர்பு கொண்ட சிக்கண்ணா, கோவில் மரக்கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த கிரீஷ், கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டி-ருந்தது. மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கத்-தாலி, 2 கிராம் தங்கக்காசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. கிரீஷ் புகார் படி, தேன்
கனிக்கோட்டை போலீசார்
மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.