/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் செயல்படுத்த உள்ளதாக வேளாண் அதிகாரி தகவல்

ADDED : மே 31, 2024 03:39 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் தாலுகா முழுவதும், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மண் வளத்தை காத்து, மக்கள் நலனை காக்கும் விதமாக, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தில், பசுந்தாள் உர உபயோகத்தை ஊக்குவித்து, மண்வளம் காக்கும் வகையில், மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வினியோகம் செய்யப்படும். மண்புழு உர தயாரிப்பு தொட்டி மற்றும் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பு மையங்களை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரசாயன உர பயன்பாட்டை குறைக்க, மண் பரிசோதனை செய்து, மண்வள அட்டை மற்றும் பேரூட்ட, நுண்ணுாட்ட சத்து பரிந்துரைகள் வழங்கப்படும். களர், அமில நிலங்களை சீர்படுத்தி பயிர் உற்பத்தி பெருக்க இடுப்பொருட்கள் வழங்கப்படும்.
மேலும், தழை, மணி, சாம்பல் மற்றும் துத்தநாக சத்துக்களை, திரவ உயிர் உரங்கள் வழியாக வழங்க ஊக்குவிக்கப்பட்டு, அவை, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். வயல் சூழல் ஆய்வு மூலம், நன்மை தரும் பூச்சியினங்களை கண்டறிந்து, ரசாயன மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க, தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய உழவர்கள், உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.