/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களிடம் அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
/
மக்களிடம் அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
மக்களிடம் அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
மக்களிடம் அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
ADDED : பிப் 16, 2025 03:04 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே,
அ.தி.மு.க., சார்பில் சட்ட சபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திண்ணை பிரசார துவக்க விழா நடந்தது. ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்
செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்து, அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட திட்-டங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்
களுக்கு வழங்கி, இரட்டை இலை சின்னத்திற்கு
ஆதரவு திரட்டினார்.
மேலும், இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது செய்த சாதனை-களை கூறி, தி.மு.க., ஆட்சியின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன
கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா, மஞ்சு, ஒன்றிய செயலாளர்கள் பாபுவெங்கடாசலம், ரவிக்குமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.