ADDED : மார் 01, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
அடுத்த வெங்கடாபுரம், ஜாகீர் மோட்டூரை சேர்ந்தவர் அஜய், 17; இவர்
கடந்த, 28 மதியம் யமஹா பைக்கில் சென்றுள்ளார்.
செட்டிப்பள்ளி,
ஐ.ஆர்.டி., பாலிடெக்னிக் அருகே கிருஷ்ணகிரி - சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், கவிழ்ந்ததில்
படுகாயமடைந்து உயிரிழந்தார். கந்திகுப்பம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

