/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியிடம் அத்துமீறிய தம்பியை கொன்ற அண்ணன்
/
மனைவியிடம் அத்துமீறிய தம்பியை கொன்ற அண்ணன்
ADDED : செப் 23, 2024 03:35 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, மனைவியிடம் அத்துமீற முயன்ற தம்-பியை, அண்ணன் அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த, உடுங்கல் மலை போடூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ், 45; கூலி தொழி-லாளி.
இவரின் தம்பி வெங்கடேஷ், 40; பெங்களூருவில் தேன் எடுக்கும் வேலை செய்தார். விடுமுறையில் கிராமத்துக்கு வந்து செல்வார். இருவருக்கும் நில பிரச்னையால் தகராறு இருந்தது.
அண்ணன் வீட்டுக்கு வெங்கடேஷ் நேற்று சென்றார். மாதேஷ் இல்லாத நிலையில், அண்ணி ரீனா, 40, தனியாக இருந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சிய-டைந்த ரீனா தப்பித்து ஓடினார். சிறிது துாரத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவரிடம் நடந்ததை கூறினார். அதற்குள் அரிவா-ளுடன் வந்த வெங்கடேசன், அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடு-பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாதேஷ், தான் வைத்திருந்த கத்தியால் தம்பியை குத்தியுள்ளார்.
இதில் நிலை தடுமாறி விழுந்த நிலையில், அவர் கையிலிருந்த அரிவாளை பறித்து, சரமாரியாக வெட்டினார். இதில் வெங்-கடேஷ் பலியானார். குருபரப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் மாதேஷ் சரணடைந்தார்.சம்பவம் நடந்த இடம், சூளகிரி போலீஸ் எல்லைக்குள் வருவதால், சூளகிரி போலீசார் விசாரிக்-கின்றனர்.