/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'துாய்மை பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்'
/
'துாய்மை பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்'
'துாய்மை பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்'
'துாய்மை பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்'
ADDED : நவ 09, 2025 03:42 AM
காவேரிப்பட்டணம்: ''துாய்மை பணியாளர்களுக்கு, 10,000 ரூபாய் ஊதியம் வழங்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில், 189 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, துாய்மை பணியாளர் நலவாரியத்தை உருவாக்கினார். அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போது, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். வாரி-யத்தில், 45 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. இதை, நலவாரி-யத்திற்கு மட்டுமே செலவிட, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது-வரை இயற்கை மரணத்திற்கு வழங்கப்பட்ட, 25,000 ரூபாய் தற்-போது, 50,000 ரூபாயாக வழங்கப்படுகிறது. விபத்தில் மரணம-டைந்தால் வழங்கிய, 5 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாயாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
துாய்மை பணியாளர்களுக்கு, 30,000 வீடுகள் ஒதுக்கீடு செய்-யவும், நகர்புறங்களில் தொகுப்பு வீடுகள், 30 சதவீதம் வழங்-கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டில் படிக்க, நிதியுதவி வழங்கப்படுகி-றது.
சென்னையில் துாய்மை பணியாளர்களுக்கு, 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. இதை மாநிலம் முழுவதும் விரிவாக்க கோரிக்கை வைக்கப்படும். துாய்மை பணியாளர்கள் பணி நிரந்-தரம், ஊதிய உயர்வு கேட்டு வருகின்றனர்.
இதுவரை, 5,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அதை, 10,000 ரூபாயாக வழங்க, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்-படும். துாய்மை பணியாளர்கள் கையுறை, முகக்கவசம், பாது-காப்பு உபகரங்களை பயன்படுத்தி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

