/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முக்கிய குற்றவாளி கைது கி.கிரி எஸ்.பி., தகவல்
/
முக்கிய குற்றவாளி கைது கி.கிரி எஸ்.பி., தகவல்
ADDED : நவ 09, 2025 03:42 AM
ஓசூர்: 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன விடுதியில் கேமரா வைத்த சம்-பவத்தில், முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக, கிருஷ்-ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று மதியம், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன விடுதியில் கேமரா வைத்த விவ-காரத்தில் அந்நிறுவன ஊழியர், நீலுகுமாரி குப்தா கைதாகி உள்ளார். முக்கிய குற்றவாளியை டில்லியில் கைது செய்-துள்ளோம். அவரிடம் விசாரித்து விட்டு இன்று (நேற்று) சிறையில் அடைக்க உள்ளோம். விடுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பப்பட்டதாக இதுவரை நடந்த விசாரணையில் தெரிய-வில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

