ADDED : நவ 08, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இளைய நகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி, 20. இவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில், 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கவுதம் என்பருடன் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல், ஒன்றாக வாழ்ந்ததில், சுமதி கர்ப்பமானார்.
இந்த விவகாரம் அவரது குடும்பத்திற்கு தெரியாத நிலையில், கடந்த, 1ல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சுமதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், 3ம் நாளில் குழந்தை இறந்தது. குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

