/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்துாரில் ஓட்டுப்பதிவு மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முகம் சுளிப்பு
/
மத்துாரில் ஓட்டுப்பதிவு மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முகம் சுளிப்பு
மத்துாரில் ஓட்டுப்பதிவு மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முகம் சுளிப்பு
மத்துாரில் ஓட்டுப்பதிவு மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முகம் சுளிப்பு
ADDED : ஏப் 05, 2024 01:20 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி
மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மத்துார் பஞ்.,ல் அரசு
துவக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுப்பதிவு மையத்தை நேற்று, மாவட்ட கலெக்டர்
சரயு ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான
பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்து, அதிலுள்ள உபகரணங்களை
பார்த்தபோது, பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டிருப்பாக கூறி
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் அங்கன்வாடிக்கு தனி கட்டடம் இல்லாமல், சிறிய அறையில்
குழந்தைகளை அடைத்து வைத்திருந்ததை அறிந்த கலெக்டர் சரயு அதிருப்தி
அடைந்தார். அதேபோல் மேலும் ஒரு கட்டடத்தில், பி.டி.ஓ.,
அலுவலகத்திற்கு சம்மந்தமான கட்டுமான பொருட்களை
வைத்திருந்தனர். இதனால் வரும், 19ல் லோக்சபா தேர்தல்
ஓட்டுப்பதிவுக்கு உண்டான, எவ்வித பணிகளும் சிறப்பாக இல்லை,
இவ்வாறு இருந்தால், தேர்தல் பணி எவ்வாறு செய்ய முடியும் என,
அதிகாரிகளை கலெக்டர் சரயு கடிந்து கொண்டார்.
ஊத்தங்கரை சட்டமன்ற
தொகுதியில், 287 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 20 மையங்களை,
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சரயு நேற்று ஆய்வு
செய்தார். அவருடன் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ் குமார்,
ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன், தாசில்தார் திருமால், பீ.டி.ஓ.,
பாலாஜி, உமாசங்கர், சிவப்பிரகாசம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.

