/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேதாந்த தேசிகரின் மூலவர் பிரதிஷ்டை
/
வேதாந்த தேசிகரின் மூலவர் பிரதிஷ்டை
ADDED : ஜூலை 11, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்திலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் சுவாமி கோவிலில், வேதாந்த தேசிகரின் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை நேற்று நடந்தது.
அதேபோல், பெரிய திருவடி, சிறிய திருவடி எனப்படும் ஹனுமான் மற்றும் கருடாழ்வார்களின் உற்சவ மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.