/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் 66 இடங்களில் ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் 66 இடங்களில் ஆர்ப்பாட்டம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் 66 இடங்களில் ஆர்ப்பாட்டம்
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் 66 இடங்களில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 02:20 AM
கிருஷ்ணகிரி: தி.மு.க., அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலி-யுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 66 அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில், பட்டுவளர்ச்சித் துறை, மாவட்ட தொழில் மையம், நெடுஞ்சாலைத்துறை, கால்நடைத் துறை என, 12க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் முன்பு, தமிழ்-நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்-படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்-பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரி-மைகளை வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதி-யமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்-களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்ப-டுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்-பது உள்ளிட்ட, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
* ஊத்தங்கரையில், அனைத்து அரசு அலுவலகங்களின் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர் செந்தில்-குமார், பொருளாளர் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் நந்த-குமார், மாவட்ட மகளிர் குழு அமைப்பு தலைவர் ஜெகதாம்-பிகை மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.