/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டுமான பணி நடப்பது தெரியாததால் விபத்தில் சிக்கிய லாரி
/
கட்டுமான பணி நடப்பது தெரியாததால் விபத்தில் சிக்கிய லாரி
கட்டுமான பணி நடப்பது தெரியாததால் விபத்தில் சிக்கிய லாரி
கட்டுமான பணி நடப்பது தெரியாததால் விபத்தில் சிக்கிய லாரி
ADDED : மே 28, 2024 09:17 AM
ஓசூர்: ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளியில், சாலை நடுவே பள்ளம் தோண்டி உயர்மட்ட மேம்பால பணிகள் நடக்கின்றன. வாகனங்கள் செல்ல, அதன் அருகே சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாலம் கட்டுமான பணி நடப்பது தெரிவதில்லை. ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகைகள் போதிய அளவில் இல்லை.
குஜராத் மாநிலத்திலிருந்து, சேலம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயந்திரங்களை ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு வந்தது. லாரியை டிரைவர் பழனிசாமி, 50, ஓட்டிச்சென்றார். இவருக்கு பாலம் பணி நடப்பது தெரியாததால், வேகமாக சென்ற அவர், சாலையில் திரும்பாமல் நேராக பாலம் பணி நடக்கும் பகுதிக்கு சென்றார். அங்கு சாலையில் குவித்து வைத்திருந்த மண் மேட்டில் லாரி சிக்கி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் பழனிசாமி காயத்துடன் உயிர் தப்பினார்.
கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், சரியான எச்சரிக்கை பலகைகள், மின்விளக்குகள் அமைத்து, பணியை மேற்கொள்ள, கோரிக்கை எழுந்துள்ளது.