ADDED : செப் 22, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, பன்னபள்ளியை சேர்ந்த முரளி, 30. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் பழக்கடை நடத்தி வந்தார்.
கடந்த, 18 அன்று கடைக்கு பழம் வாங்க, பெங்களூரு சென்றவர் அங்கிருந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து, அங்குள்ள தமிழ்நாடு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதையடுத்து, சொந்த ஊர் திரும்பி வருவதாக கூறியவர் வரவில்லை. அவரது பெற்றோர் புகார் படி, ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.