/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்யாண ராமர் கும்பாபிஷேக விழா சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியர்
/
கல்யாண ராமர் கும்பாபிஷேக விழா சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியர்
கல்யாண ராமர் கும்பாபிஷேக விழா சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியர்
கல்யாண ராமர் கும்பாபிஷேக விழா சீர் வரிசை வழங்கிய இஸ்லாமியர்
ADDED : செப் 06, 2025 01:00 AM
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டையில் பழமை வாய்ந்த கல்யாண ராமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கும்பாபிஷேக விழா, நாளை, (7ல்) நடக்கிறது.
இதையொட்டி நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள பிற மதத்தை சேர்ந்த இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு கோவில் நிர்வாக குழு அழைப்பிதழ் வழங்கியது.
இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர், நேற்று மசூதியில் தொழுகை முடித்த பின், மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, தாம்பூலம் தட்டில் சீர்வரிசையுடன் கல்யாண ராமர் கோவிலுக்கு மேள தாளத்துடன் வந்தனர். பின் கோவில் நிர்வாக கமிட்டியிடம், சீர் வரிசையை வழங்கினர். பின், கட்டி அணைத்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.