/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உபரி நீர் வெளியேறும் கால்வாயில் தேங்கிய மழைநீர் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மக்கள்

ADDED : அக் 20, 2024 01:47 AM
உபரி நீர் வெளியேறும் கால்வாயில் தேங்கிய மழைநீர்
சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மக்கள்
ஓசூர், அக். 20-
ஓசூரில், ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் மழைநீர் தேங்கி நின்றதால், மயானத்திற்கு சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 44 வது வார்டுக்கு உட்பட்ட கர்னுார் பகுதியில், 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் உயிரிழந்தால் அடக்கம் செய்ய இரு மயானங்கள் உள்ளன. அங்கு செல்ல தனியாக சாலை வசதி இல்லாததால், கர்னுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் கால்வாய் வழியாக தான் மக்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும் போது மயானத்திற்கு செல்ல முடியாது. இப்பகுதியில் சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுவதால், ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நேற்று அதிகாலை பெய்த மழை நீர் கால்வாயில் தேங்கியது. இந்நிலையில், கர்னுாரை சேர்ந்த தொழிலாளி தேவராஜ், 53, உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். மழைநீர் கால்வாயில் தேங்கி நின்றதால், அவரது சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய முடியாத நிலை உருவானது. நிரந்தரமான பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறி, மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். இதையறிந்த மாநகராட்சி தி.மு.க., - கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், நிரந்தரமாக செல்ல பாதை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார். இதனால் மக்கள் போராட்டம் நடத்தும் எண்ணத்தை கைவிட்டனர். தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின், தேவராஜ் சடலத்தை அடக்கம் செய்யப்பட்டது.