ADDED : ஆக 26, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் அந்திவாடி குறிஞ்சி நகர் பகுதியில், புதிய கட்டுமான பணி நடக்கிறது. அங்கு லிப்ட் வசதி செய்ய பள்ளம் தோண்டி உள்ளனர்.
அவ்வழியாக மதுபோதையில் சென்ற, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, அந்த குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.