ADDED : பிப் 26, 2024 02:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பத்தில், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில், நாச்சிகுப்பம், மணவாரனப்பள்ளி, சிங்கிரிப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று நாச்சிகுப்பத்தில், சாலையோரம் செல்லும் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது. இதனால் சாலையில் ஒரு கி.மீ., தொலைவிற்கு குடிநீர் ஓடியதால், சேறும், சதியுமாக மாறியது. நேற்று முன்தினம் இரவு முதல் காலை, 9:00 மணி வரை சாலையில் குடிநீர் வீணாக சென்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

