sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மதுபாராக மாறிய வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம்

/

மதுபாராக மாறிய வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம்

மதுபாராக மாறிய வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம்

மதுபாராக மாறிய வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம்


ADDED : ஜன 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், மொரப்பூர் செல்லும் சாலையில், நேதாஜி நகரில், வட்டார இயக்க மேலாண்மை அலகு மையம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒன்றிய அலுவலக-மான இதன் மூலம், மகளிருக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். இந்நி-லையில் இரவு நேரங்களில் அலுவலக வளாகத்தில், தினமும் பலர் அமர்ந்து, மது அருந்தி இப்பகுதியை திறந்தவெளி மது

பாராக மாற்றி விடுகின்றனர்.

இரவு, 8:00 மணிக்கு தொடங்கும் மதுப்பிரியர்களின் அட்ட-காசம், நள்ளிரவு, 12:00 மணியை கடந்தும் நீடிக்கிறது. இதனால் இப்பகுதியில் இரவில் பெண்கள் உட்பட யாரும் நடந்து செல்ல முடியவில்லை.

மேலும், காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை அங்-கேயே வீசிச் செல்கின்றனர். காலையில் வரும் பெண்கள் அவற்றை துாய்மை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். 'குடி மக்களின்' பிடியில் இருந்து, அலுவலகத்தை மீட்க போலீசார் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்

பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us