/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 ஆண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஆர்.ஓ., நிலையம்
/
3 ஆண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஆர்.ஓ., நிலையம்
3 ஆண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஆர்.ஓ., நிலையம்
3 ஆண்டாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் ஆர்.ஓ., நிலையம்
ADDED : நவ 21, 2024 01:18 AM
3 ஆண்டாக திறப்பு விழாவிற்கு
காத்திருக்கும் ஆர்.ஓ., நிலையம்
கிருஷ்ணகிரி, நவ. 21-
கிருஷ்ணகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட ஆர்.ஓ., மையம், மூன்றாண்டாக திறக்கப்படாமல் மூடிக்கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பெலவர்த்தி பஞ்.,க்கு உட்பட்ட வள்ளுவர்புரம் கிராமம் உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், 'புளோரைடு' அதிகமாக உள்ள நீரை பயன்படுத்த முடியாமல் தவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
இதையடுத்து கடந்த, 2020ல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு மணி நேரத்திற்கு, 1,0-00 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் வகையில் ஆர்.ஓ., மையம் அமைக்கும் பணி துவங்கி, 2021ல் முடிந்தது. ஆனால் இன்று வரை இந்த ஆர்.ஓ., மையம் திறக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் குடிநீரில் 'புளோரைடு' அளவு மிக அதிகளவில் உள்ளது. இதற்கு தீர்வு காண பல ஆண்டுகள் மனு அளித்தோம். தற்போது ஆர்.ஓ., மையம் அமைக்கப்பட்டும், மூன்றாண்டுகளாக திறக்காமல் உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, எங்கள் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.