/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5.80 லட்சத்தில் சீரமைத்த பள்ளி கட்டட கூரை ஒழுகுது
/
ரூ.5.80 லட்சத்தில் சீரமைத்த பள்ளி கட்டட கூரை ஒழுகுது
ரூ.5.80 லட்சத்தில் சீரமைத்த பள்ளி கட்டட கூரை ஒழுகுது
ரூ.5.80 லட்சத்தில் சீரமைத்த பள்ளி கட்டட கூரை ஒழுகுது
ADDED : அக் 17, 2024 01:10 AM
ரூ.5.80 லட்சத்தில் சீரமைத்த
பள்ளி கட்டட கூரை ஒழுகுது
ஓசூர், அக். 17-
சூளகிரி அருகே, 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு செய்யப்பட்ட பள்ளி கட்டட கூரை ஒழுகி வருவதால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் பஞ்., மிடுதேப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்குகிறது. 65 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால், 2022 - 23 ம் ஆண்டு, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 5.80 லட்சம் ரூபாய் மதிப்பில் சமீபத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பள்ளி கட்டடத்தின் கான்கிரீட் கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகியது. அதனால், மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பள்ளி வகுப்பறை கட்டடம் மோசமாக இருப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் தயங்குகின்றனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, மோசமாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால், திறப்பு விழாவிற்கு காலதாமதம் செய்யப்படுகிறது. மாணவ, மாணவியர் நலன் கருதி உடனடியாக புதிய வகுப்பறைகளை திறக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

