/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரச மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி; இருவர் காயம்
/
அரச மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி; இருவர் காயம்
அரச மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி; இருவர் காயம்
அரச மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி; இருவர் காயம்
ADDED : மே 09, 2024 06:11 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, மல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
இதன் அருகே உள்ள அரச மரம், கடந்த இரு நாட்களாக பலத்த சூறாவளி காற்றுக்கு பலவீனமாக இருந்தது. நேற்று காலை, 8:40 மணிக்கு மீண்டும் பலத்த காற்று வீசிய நிலையில், மரத்தின் பெரிய கிளை முறிந்து, சாலையில் சென்ற பைக் மீது விழுந்தது. இதில், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற கோடியள்ளியை சேர்ந்த லோகேஷ், 49, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பைக்கை ஓட்டி சென்ற முழுவனப்பள்ளியை சேர்ந்த ரமேஷ், 32, மற்றும் நடந்து சென்ற அந்தேனப்பள்ளி கோவிந்தராஜ், 60, ஆகியோர் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த லோகேஷ் கர்நாடகா மாநிலத்திலுள்ள, சிப்ஸ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.