/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு 3வது நாளாக விசாரணை
/
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு 3வது நாளாக விசாரணை
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு 3வது நாளாக விசாரணை
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு 3வது நாளாக விசாரணை
ADDED : ஆக 25, 2024 01:02 AM
கிருஷ்ணகிரி, ஆக. 25-
''பள்ளி மாணவி பலாத்கார சம்பவம் குறித்து விசாரிக்க அமைத்த சிறப்பு புலனாய்வு குழு, கிருஷ்ணகிரியில் தொடர்ந்து விசாரித்து வருகிறது,'' என, போலீஸ் ஐ.ஜி., பவானீஸ்வரி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி., முகாம் நடந்தது. இதில், 12 வயதுள்ள, 8ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், 13 மாணவியர் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினர். இதில், சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த, 10 பேர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. முக்கிய குற்றவாளியான சிவராமன் போலீசிடமிருந்து தப்ப முயன்ற போது வலது கால் முறிந்தது. மேலும் எலி மருந்து தின்று, சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் காலை இறந்தார். சிறப்பு புலனாய்வு குழு, 3வது நாளாக விசாரித்து வருகிறது.
இது குறித்து, ஐ.ஜி., பவானீஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், ''தனியார் பள்ளிகளில், போலி என்.சி.சி., முகாம் நடத்தியது, பாலியல் சீண்டல்கள் வேறெங்கும் நடந்துள்ளதா என்பது குறித்து பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறோம். இது குறித்து விசாரிக்க, 2 டி.எஸ்.பி.,க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்,'' என்றார்.
பள்ளிகளுக்கு தொடர், 3 நாட்கள் விடுமுறை என்பதால், பள்ளி மாணவியர், பெற்றோருக்கு மன நல ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினர், 3 நாட்களுக்கு பிறகு, வரும், 27ல் மீண்டும் தங்கள் பணிகளை துவக்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.