/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம்
ADDED : ஏப் 29, 2025 01:55 AM
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு, மெய்யாண்டப்பட்டி கிராம ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வரை, மா.கம்யூ., கட்சி சார்பில், காத்திருக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
காட்டேரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், மகாலிங்கம், வட்ட செயலாளர் சபாபதி, மாவட்ட குழு உறுப்பினர் கவிமணிதேவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பஞ்., மெய்யாண்டப்பட்டி கிராம பகுதியில், இரண்டு தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, நேற்று ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு, பட்டா வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டம் நடந்தது. அவர்களிடம், ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.