/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உலகளாவிய முறைகளில் இல்லாத பெருமைகள் தமிழ்மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் உண்டு'
/
'உலகளாவிய முறைகளில் இல்லாத பெருமைகள் தமிழ்மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் உண்டு'
'உலகளாவிய முறைகளில் இல்லாத பெருமைகள் தமிழ்மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் உண்டு'
'உலகளாவிய முறைகளில் இல்லாத பெருமைகள் தமிழ்மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் உண்டு'
ADDED : செப் 05, 2025 01:36 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி அரசு மருத்துக்கல்லுாரி கூட்டரங்கில், 'மாபெரும் தமிழ்க் கனவு' தமிழ்மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. போராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் 'மங்காப் புகழ்' என்ற தலைப்பில் பேசினார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:எந்த ஒரு சமூகம் அதன் வரலாறை மறைத்து விட்டதோ, அந்த சமூகத்தினால் வருங்காலத்தில் வரலாறுகள் படைக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். தமிழ் சமூகத்திற்கு பல்வேறு சிறப்புகள், பெருமைகள் உள்ளது. உலகளாவிய முறைகளில் இல்லாத பெருமைகள் எல்லாம் தமிழ்
மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் முதன் முதலில் பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். 'கல்லில் உறைந்த வரலாறு' என்கிற கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு தொன்மைகள் குறித்த புத்தகம் விரைவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும். மயிலாடும்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட கனிம மாதிரிகளை, பீட்டா லேபில் கொடுக்கப்பட்டு, 'ஆஸிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி' மூலம் வயது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இரும்புடைய பயன்பாடு, 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இருக்கிறது என்பது, அறிவியல் பூர்வமாக தமிழக அரசால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தர்மபுரி மண்டல இணை இயக்குனர் (கல்லுாரி) ராமலட்சுமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.